Saturday, March 14, 2015

பேய்












வாழும் மனிதனை விட
வாழ்ந்து மறைந்த  பேய்கள் அதிகம்


வாய்ச்சொல்லில் பரப்பி அச்சுறுத்தும்
மனிதனின் வார்த்தைகளின் நீளத்துக்கும்
அதற்கு அப்பாலும்
வாழ்ந்து கிடக்கின்றன..
பேயின் நினைவுகள்

எல்லா பேய்களுக்கும்
அதிக பட்சம்
இரண்டு தலைமுறை தான்
ஆயுள்

வாழ்ந்து இறந்து பேயான மனிதர்களை விட
வாழ்ந்து கடவுளான மனிதர்கள்
அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாய்!!!

1 comment:

  1. பேய் நமக்குள்ளேதான் இருக்கிறது. எனவே அதை நம்புவதில் ஏதும் சிரமமில்லை. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete