Tuesday, December 27, 2016

பிம்பம்

உடல் பெருத்து
கடமைகள் பெருத்து
குடும்பமும் குட்டியுமாய்
ஒப்பனை பொறுப்பற்ற
தோற்றத்தில் தற்போது இருந்தாலும்
என்னோடு வாழக்கிடைக்காத
காதலியின் பிம்பம்
இன்னமும் தேவதையின் அந்தஸ்தை
இழக்கவில்லை..


என் பிம்பம் மற்றும்
உண்மையின் மேலுள்ள அவளின்
அபிப்ராயம் குறித்த கேள்விகளிலேயே
வாழ்நாள் முழுக்க நீள்கிறது என் ஐயம்!

1 comment:

  1. கவிதை அருமை அண்ணா....... வாழ்த்துக்கள்

    ReplyDelete